அதிமுக பிரமுகர் கொடூர கொலை! அடுத்தடுத்து 3 பேர் கொலையில் திடீர் திருப்பம்! பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை அருகே நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 72) அதிமுக கிளைச் செயலாளராகவும், ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார். 

அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தும் கணேசன், அதிகாலை முதல் மதியம் வரை வியாபாரத்தில் ஈடுபட்டு, பிற்பகலில் கட்சி பணிகளில் பங்கேற்பார் என்று தெரிகிறது. 

இந்த நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த கணேசனை, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சூழ்ந்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மேலும், அந்த கும்பல் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரையும் காலில் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது. தகவலறிந்த திருப்பாச்சேத்தி போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கி உள்ளனர்.

முன்னதாக தீபாவளி அன்று நடைபெற்ற மற்றொரு கொலை உள்பட, மூன்று கொலைகள் தொடர்ச்சியாக நடந்ததால், கிராம மக்கள் போலீசாரிடம் ஆத்திரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வெளியான ஒரு தகவலின்படி, கொலைகளுக்குக் காரணமாக அண்மையில் நாட்டார்குடி கிராமத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், சுவாமி சிலைகள் வைப்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivangaingai ADMK Ganesan hacked to death case police investigation 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->