சிவராமன் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் திமுக கூட்டணி கட்சிகள்! அடுத்தடுத்த டிவிட் - டிவிஸ்ட் கொடுத்த சீமான்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, 13 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதை சிவராமன் கைது செய்யப்பட்ட அன்றே எலி மருந்து சாப்பிட்டதால், இன்று காலை உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிவராமனின் தந்தை மது போதையில் இருசக்கர வாகனத்திலிருந்து நின்ற நிலையில் இருந்தே கீழே விழுந்து பலியானதாக சிசிடிவி கட்சிகள் வெளியாகியுள்ளன. 

அடுத்தடுத்த இந்த மரணங்கள் சந்தேகங்களை எழுப்புவதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரமும், கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான போலி என்.சி.சி ஆசிரியர் சிவராமனும் அவரது தந்தையும்  அடுத்தடுத்து மரணம் பல கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகமும் எனக்கு இல்லை. குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து எனக்கு சிவராமன் கடிதமும் எழுதியுள்ளார்” எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaraman Death case NTK Seeman and DMK Alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->