"ஆட்டம் காண வைக்கவே ஆட்டோ" - இறங்கி அடிக்கும் தமிழிசை.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். 

 

தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஆட்டோவில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளத்த அவர் "மக்களோடு இருப்பது தான் எனக்கு வசதி. அதனால்தான் ஆளுநராக இருந்தபோது கிடைத்த வசதிகளை விட்டு விட்டு வந்துள்ளேன். 

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை ஆட்டம் காண வைப்பதற்காகவே ஆட்டோவில் சென்று பரப்புரை மேற்கொண்டு வருகிறேன் என தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளி வாகனத்தில் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Chennai BJP candidate Tamilisai campaign in auto


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->