எஸ்பி வருண்குமார் vs சீமான் விவகாரத்தில் பூகம்பத்தை கிளப்பும் திருப்பம்! நெருக்கடியில் சிக்கிய திமுக அரசு! - Seithipunal
Seithipunal


திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு களத்தில் இறங்கியுள்ளனர். 

ஒரு பக்கம் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எஸ்பி வருண்குமார் கைது செய்து வரும் நிலையில், இந்த வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார், நேரடியாக என்னுடன் மோத தயாரா என்றும் வருண்குமார் எஸ்பி வருண்குமாருக்கு சவால் விட்டுள்ளார். 

மோதல் ஆரம்பப்புள்ளி:

இந்த விவகாரத்தை பொருத்தவரை சமூக வலைத்தளங்களில், குறிப்பாக x சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு நன்றாகவே தெரியும், ஆபாசமான, அருவருக்கத்தக்க பதிவுகளை எந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள், எந்த கட்சியின் ஆதரவாளர்கள் அதிகம் செய்து வருகிறார் என்பதை ஓரளவுக்கு புரிந்து, அறிந்து இருப்பார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

மேலும், தமிழக காவல்துறை சாதிய ரீதியாக செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் பலமுறை தெரிவித்துள்ளார். அண்மையில் கூட இதே கருத்தை வலிமையாக எடுத்து உரைத்துள்ளார் திருமவளவன். சொல்லப்போனால் இது காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு ஒரு தலைகுவான விமர்சனம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

திருமாவளவனை போல் தமிழக காவல்துறை என்று சொல்லாமல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு பேட்டியின்போது வருண்குமாரை மட்டும் குறிப்பிட்டு, அவர் சில சாதிகளுக்கு எதிராக வன்மத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே, அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அன்றைய தினமே அவர் நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவருடைய செல்ஃபோன் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

அடுத்த சில தினங்களில் திமுகவின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் சிலரிடமிருந்து, சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த ஆடியோக்கள் வெளியாகின. இந்த ஆடியோக்களை எஸ்பி வருண்குமார் தான் பழிவாங்கும் நோக்கத்தோடு வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டி கொந்தளிக்க ஆரம்பித்தனர். 

உச்சம் தோட்ட மோதல்: 

அதனை உறுதிப்படுத்தும் விதமாக சாட்டை துரைமுருகனும் காணொளி வெளியிட, சீமான் ஒரு பக்கம் வருண்குமார் பெயரை குறிப்பிடாமல், ஐபிஎஸ் படித்தால் அதற்குண்டான வேலையை பாருங்கள். திமுக ஐடி விங்க் போல செயல்படாதீர்கள் என்று ஒருமையில் பேசி திட்டி இருந்தார். 

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் வருண்குமாரை எல்லை மீறி திட்டத் தொடங்கவே, இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.

உள்ளே வந்த அதிமுக:

இதுவரை அதிமுக தரப்பில் இருந்து இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கப்படாத நிலையில், முதல் முறையாக அதிமுகவின் ஐடி விங்  செயலாளர் ராஜ் சத்யன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார்.,IPS மற்றும் அவரது மனைவி அவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் அருவருக்கத்தக்க வெறுப்புப் பிரச்சாரமானது, இந்த விடியா திமுக ஆட்சியில் யாருக்கும், குறிப்பாக காவல்துறையினருக்கும் இணையவெளியில் கூட பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துகிறது. 

வெவ்வேறு இயக்கக் கோட்பாட்டில் பயணித்தாலும், மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்கள் எதையும் நேரடியாக எதிர்கொள்பவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவர் கூற்றின் படி, அவர் இதுபோன்ற அவதூறுகளில் இறங்கமாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

யாரோ சில விஷமிகள் காவல்துறையினர் குறித்தே இதுபோன்ற ஆபாசப் பதிவுகளை தைரியமாக பதிவிடுகிறார்கள், ஆக்கப்பூர்வமாக விமர்சித்தால் கூட "உடனே" கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விடியா திமுக அரசு, காவல்துறையின் உயர் அதிகாரிகள், அதுவும் ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி, வந்திதா பாண்டே.,IPS மீது வீசப்படும் மிகவும் தரம் தாழ்ந்த ஆபாச அவதூறுகளை கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், பொதுத்தளத்தில் எதிர்ப்பு வந்ததும் தாமதமாக 2 பேரைக் கைது செய்து ஆமை வேகத்தில் செயல்படுவதும் ஏன்?

நெருக்கடியில் திமுக அரசு:

திமுகவின் கரை வேட்டி இழுத்த இழுப்பிற்கு வரும் FIR-களும் கைவிலங்குகளும், மதிப்புமிக்க காக்கிச் சட்டைகள், தங்களை தாங்களை பாதுகாக்க வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? காவல்துறை உயர் அதிகாரிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த ஆபாச வெறுப்புப் பிரச்சாரத்தை கண்டு கொள்ளாத அரசின் செயல் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP Varunkumar vs NTK Seeman ADMK Raj sathyan DMK Mkstalin TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->