மீண்டும் "பொன்முடி MLA".. வெளியாக போகும் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதோடு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி விதித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததோடு ஒரு மாதத்திற்குள் ஜாமின் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கியது.

இதன் காரணமாக பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட தொடங்குவார். நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து சபாநாயகர் அப்பாவு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் திரீக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி மீண்டும் செயல்படுவது குறித்தான அறிவிப்பு வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Speaker appavu going to announce ponmudi continue as MLA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->