கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு : பார் கவுன்சிலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவை மீறி, சில மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது, வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என்று, உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்து வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளி மாணவி மரணம் தொடர்பாக இரண்டு உடற்கூறாய்வு அறிக்கையை ஒப்பிட்டு, வழக்கறிஞர்கள் சிலர் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஜிப்மர் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகும், சில வழக்கறிஞர்கள் மாறுபட்ட இந்த கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வழக்கறிஞர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.


முன்னதாக, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ காரணம் இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

அதன் விவரம் பின்வருமாறு : இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிபதி இளந்திரையன் நேற்று ஒரு உத்தரவை வழங்கினார். 

அதில், "மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின் படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. 

மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டு, உடலில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தக்கரை இல்லை. அது வண்ண பூச்சி என்றும் நிபுணர்கள் அறிக்கை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த மாணவி வேதியல் பாடம் படிப்பதில் சிரமப்பட்டு இருந்தது விசாரணையில் உறுதியாகி உள்ளது. சகமானவிகள் சாட்சியம், தற்கொலை கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்கு பதிவு செய்தது தவறு" என்று நீதிபதி தெரிவித்து இருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri mathi case chennai hc order to bar council


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->