#BREAKING | நீதி கோரி முதல்வரை சந்தித்த மாணவி ஸ்ரீ மதியின் பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் இன்று, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திக்க சென்னை வந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பிற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறையானதால் பள்ளி தீக்கிரையானது.

இதனை அடுத்து மாணவியின் உடலானது பிரேத சோதனைகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. தற்பொழுது பிரேத பரிசோதனை அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி கடலூரிலிருந்து சென்னைவரை நடைபயணம் மேற்கொள்ள போவதாக மாணவியின் பெற்றோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை ஸ்ரீமதியின் தாய், தந்தை சந்திக்க வந்துள்ளனர். விரைவில் அவர்கள் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri mathi parents may be meet cm stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->