அரசியல் திருப்பம் என்றால் இப்படி இருக்கவேண்டும் : வீட்டுக்கு செல்  கோத்தா.! அதிபருக்கு ஆப்பு., ரனில் விக்ரமசிங்கே அதிரடி பேட்டி.!  - Seithipunal
Seithipunal


இலங்கை வரலாற்றில் இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். 'இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணம்' என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் செய்தனர்.

தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதனை தொடர்ந்து, இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். புதிய பிரதமருக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. மேலும், மகிந்த ராஜபக்சேயின் கட்சியும் முழுமையான ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது.

இருந்த போதிலும், அந்நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும்ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்‌சே பதவி விலகும் வரை இந்த போராட்டம் நடக்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக மக்கள் போராட்டத்திற்கு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அவரின் அந்த பேட்டியில்,

"வீட்டுக்கு செல்  கோத்தா என்ற முழக்கத்துடன் கூடிய மக்களின் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். 'வீட்டுக்கு செல்  கோத்தா' முழக்கம் காரணமாக இலங்கை அரசியல் அமைப்பில் புதிய மாற்றம் ஏற்படும். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான பொறுப்பு உண்டாகும்" என்று ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka Economic crisis Ranil wikramasinge gothabaya rajapaksa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->