அது என்ன 'திராவிட மாடல்' - முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற கிளை! - Seithipunal
Seithipunal


முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி பெருமையாக கூறி கொள்ளும் 'திராவிட மாடல்' வார்த்தையில் 'மாடல்' என்ற ஆங்கில சொல்லுக்கு மாற்றாக தமிழ் சொல்லை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற கிளை அறிவுரை கூறியுள்ளது.

தமிழக அரசாணையை பின்பற்றாமல் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் திருமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதில்,  தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும். ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், திராவிட மாடலில், 'மாடல்' என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழ் அர்த்தச் சொல் என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள். ஏன் மாடல் என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்துகிறார்கள், முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாமே என்று, நீதிபதிகள் அறிவுரை வழங்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin dravida model issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->