"தென்னகத்து போஸ்" முத்துராமலிங்க தேவர் குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அறுபதாவது குருபூஜை விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதனை தொடர்ந்து மதுரை கோரிப்பாளையத்தில் இருக்கும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரை மாநகர் முழுவதும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்த குருபூஜை விழாவில் கலந்து கொள்ள ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செல்ல இருந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட முதுகு வலியினால் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாமல் ராமநாதபுரத்திற்கு வரவில்லை. அவருக்கு பதில் அமைச்சர்கள் பலரும் வந்து விழாவை சிறப்பித்து வருகின்றனர். 

இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் முத்துராமலிங்க தேவர் குறித்து, "கொடுங்கோல் சட்டத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கரத்தை வலுப்படுத்தியவர், தென்னகத்து போஸ், ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், வீரத்தையும் நற்பண்புகளையும், நன்றியோடு நினைவுகூருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin tweet about muthuramalinga devar jayanthi 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->