ஓணம் பண்டிகைக்கு மலையாள மொழியில் வாழ்த்திய ஸ்டாலின்.! அதன் தமிழ் அர்த்தம் இதோ.!
Stalin wishes To onam In malayalam
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க். ஸ்டாலின் மலையாள மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாபலி சக்கரவர்த்தியின் தலைக்கணத்தை அடக்க, திருமால் வாமனராக அவதாரம் எடுத்து, மகாபலிச்சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் தானமாகக் கேட்டுள்ளார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி சம்மதித்ததும், முதலாவது அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்த வாமனர், பின் மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியுடைய தலையில் வைத்து, அவரை கொல்ல முயற்சித்த போது மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு வருடமும் தனது மக்களைக் காண அனுமதி அளிக்க வேண்டுமென என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்ற வாமனர் வரம் கொடுத்தார். இதன் அடிப்படையில் தான் மகாபலி சக்கரவர்த்தி தம் மக்களை காணவரும் நாளை ஓணம் என்றும், புத்தாண்டாகவும் மலையாள மக்கள் கொண்டாடுகின்றனர் என்பது புராணம்.
இத்தகைய நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் மலையாள மொழியில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "மகாபலி மன்னனை மலர்களால் கோலமிட்டு வரவேற்கின்ற அனைத்து மலையாளிகள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். எத்தனை கதைகள் புனைந்தாலும் கூட சன்மார்க்க அரசனை மக்கள் மனதில் இருந்து எப்பொழுதும் அழிக்கவே முடியாது! கேரள மக்களுக்கான ஓணம் பண்டிகை புதிய சகாப்தத்தின் துவக்கத்தை குறிப்பதாக தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கூறப்படுகின்றன. இது திராவிடர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான தொடர்பு. கருத்து வேறுபாடுகளை விடுத்து உறவை வலுப்படுத்த முயல்வோம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Stalin wishes To onam In malayalam