திமுக ஆட்சியை கலைக்க நேரிடும்! சுப்பிரமணிய சுவாமி பகிரங்க எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் டெங்கு மலேரியா கொசு கொரோனா போன்ற சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதே போன்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் "அமைச்சராக உள்ள ஸ்டாலின் மகன் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுப்பேன். இந்தியா ஒரு கூட்டமைப்பு அல்ல மாநிலங்களின் ஒன்றியம் என்பதை 1991ல் நிரூபித்தேன்" என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramaniasamy said that he will take action to dissolve DMK govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->