அண்ணாமலை யாரு.? தமிழ்நாட்டில் பாஜக இருக்கா.? பரபரப்பை கிளப்பிய பாஜக எம்பி.!!
Subramaniaswamy says he does not know who is Annamalai
பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசாமி இரண்டு நாள் பயணமாக மதுரைக்கு வந்துள்ளார். இந்த பயணத்தின் போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுப்பிரமணியசாமி "காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சர்தார் வல்லபாய் பட்டேல் முன்பே பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முற்பட்டபோது பிரதமர் நேரு மறுப்பு தெரிவித்தார். இந்திய மக்கள் தொகையில் பாதி ஆண்கள் பாதி பெண்கள் உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் தான் என திருமணம் செய்ய வேண்டும். ஒருவர் நான்கு பேரை திருமணம் செய்து கொள்ள முடியாது. இதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.
எனவே நாட்டில் பொது சிவில் சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்" என தெரிவித்தார். அப்போது கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக துவள்ளி குறித்து செய்தியாளர்கள் இருப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் "பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. அவர் பேசிக்கொண்டே தான் இருப்பார். ஆனால் எதையும் செயல்படுத்துவதில்லை.
மோடி அளித்த வாக்குறுதியில் எதுவும் அவர் நிறைவேற்றவில்லை. திமுகவின் செயல்பாடுகளை நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறேன். ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்ட திட்டங்களை இன்னும் பின்பற்றி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எல்லாம் அவர்கள் திருடுகிறார்கள். பழைய காலங்களில் திமுகவை தில்லுமுல்லு கழகம் என சொல்வார்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் தோல்வி அடைந்து விட்டார். அவருக்கு வெளிநாடு சுற்றுவதற்கு அக்கறை உள்ளது.
அவர் இதைத்தான் முதலில் செய்திருக்க வேண்டும். அவசரமாக அமெரிக்கா சென்றவர் என்ன கொண்டு வந்தார். 2024 இல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை தற்போது சொல்ல முடியாது" என பதில் அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பியதற்கு "அண்ணாமலை யாரு? தமிழ்நாட்டில் பாஜக இருக்கா? நான் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் பாஜகவை பார்க்கவில்லை" என கிண்டலாக பதில் அளித்தார். அவருடைய இந்த பதில் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
English Summary
Subramaniaswamy says he does not know who is Annamalai