சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறாக பேசிய சுந்தரவள்ளிக்கு அபராதம்.!
Sundaravalli fined for defaming Sabarimala Ayyappan
கடவுள் குறித்து அவதூறாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர் சுந்தரவள்ளிக்கு எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளரான சுந்தரவள்ளி (வயது48). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் கடவுள் குறித்து அவதூறாக பேசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதனைத் தொடர்ந்து சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்பினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுந்தரவள்ளிக்கு ரூ.3500 அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கிரிஜாராணி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Sundaravalli fined for defaming Sabarimala Ayyappan