கெஜ்ரிவால் வெளியே வரக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம் - கெஜ்ரிவால் மனைவி சுனிதா குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal



டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப் பட்டார். 

இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்து பின்னர் மீண்டும் சிறையில் சரணடைந்தார். இதையடுத்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் அவருக்கு ஜாமீன் அளித்து விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூன் 20ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு மறுநாளே அமலாக்கத் துறை இந்த உத்தரவுக்கு தடை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்றம் அந்த ஜாமீனை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கெஜ்ரிவால் தரப்பு திரும்பப் பெற்றுள்ளது. 

இதனிடையே இன்று காலை திகார் சிறையில் வைத்தே அமலாக்கத் துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவால் மனைவி சுனிதா தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த ஜாமீனுக்கு தடையைப் பெற்ற அமலாக்கத் துறை, இன்று காலை அவசரமாக சிறையில் அவரை கைது செய்துள்ளது. 

கெஜ்ரிவால் வெளியே வந்து விடவே கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம். இதற்காக அரசின் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இது மத்திய அரசின் சர்வாதிகார போக்கினை படம் பிடித்துக் காட்டுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunitha Kejriwal About Arvind Kejriwals Bail Ban and Arrest In Tihar Jail


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->