நூபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Supreme Court orders action in Nupur Sharma case
நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதனால் போராட்டங்கள் வெடித்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நூபுர் சர்மா கடந்த ஜூன் மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நூபுர் சர்மா தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள், நூபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
Supreme Court orders action in Nupur Sharma case