24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி..புதுச்சேரி அரசு அறிவிப்பு!
Shops will be allowed to remain open 24 hours. Puducherry Government Announces
புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இந்த நடைமுறை 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி என நாம் அழைக்கப்படுவதுண்டு. ஏனென்றால், மணல் கடற்கரைகள், நினைவுச் சின்னங்கள், பாரம்பரிய வீடுகள் என ஒரு பிரெஞ்சு நாட்டின் கலாச்சார எச்சங்களை எல்லாம் அங்கு நாம் காணலாம். சுதந்திரத்துக்கு முன்பு பிரெஞ்சுகாரர்களின் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி பகுதி எப்போதும் சுற்றுலா பிரியர்களின் ஹிட் லிஸ்டில் இருக்கும். இந்தியாவில் இருக்கும் வரலாற்று மற்றும் பாதுகாக்கப்பட்ட காலனித்துவ அழகியலின் சுற்றுலா தளமாகவும் புதுச்சேரி இருக்கிறது.
புதுச்சேரியின் இயற்கை அழகு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது என்று சொல்லலாம் . அப்படிப்பட்ட புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.மேலும் இந்த நடைமுறை 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அனுமதியுடன் தொழில்துறை சார்பு செயலர் முத்துமீனா பிறப்பித்துள்ள ஆணையில், எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்த்திருத்த செயல் திட்டத்தை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை அடையவும் புதுச்சேரி அரசு தொழிலாளர் சட்டங்கள் எளிதாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில் புதுச்சேரியில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் இந்த நடைமுறை 3 ஆ்ண்டுகள் அமலில் இருக்கும் என்று தொழில்துறை சார்பு செயலர் முத்துமீனா பிறப்பித்துள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Shops will be allowed to remain open 24 hours. Puducherry Government Announces