18 பேரை கட்டுப்படுத்த முடியாதவருக்கு தலைவர் பதவியா.? டெல்லிக்கு பரபரப்பு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த புதிய தலைவராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகையும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்குவானோனும் நியமிக்க படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவுக்கு நெருக்கமாக இருக்கும் செல்வபெருந்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படுவதால் கூட்டணி கட்சிகள் இடையே சுமுக உறவு நிலவும் என டெல்லி தலைமை நினைக்கிறது. ஆனால் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் கமிட்டியில் நிலவும் உக்கட்சி ஊசல் காரணமாக செல்வபெருந்தகை நியமனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையே ஒருங்கிணைக்க முடியாமல் செல்வபெருந்தகை தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் 18 சட்டமன்ற உறுப்பினர்களையே ஒருங்கிணைக்க முடியாதவரால் 300க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்பட முடியாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் தலைமை மாற்றம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை நியமிக்கலாம்" என அந்த கடிதத்தில் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil congress shocking letter sent to delhi about selvaperunthagai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->