தமிழகத்தில் இருக்கும் பீடை பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான் - ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி! - Seithipunal
Seithipunal


அண்ணாமலை வேதாளம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், தமிழகத்தில் நடமாடும் பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தெரிவித்ததாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ற வேதாளம் இப்போது எங்களை எல்லாம் விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை மீது போய் ஏறியுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, தமிழகத்தை இன்று பீடைகள் போல பல பேய்கள் பிடித்துள்ளன. இந்த பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான். எல்லா பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஓட்ட வேண்டியது தான் என்று  கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu BJP President Annamalai press conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->