இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.

நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதையடுத்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை  இரவு 9 மணிக்கு விமானத்தில் டெல்லி சென்றுள்ளார். மேலும், இன்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ரவி டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Governor RN Ravi to visit Delhi today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->