அசத்தல் பேச்சு!!!பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது!!! - முதலமைச்சர்
tamil Nadu leading in economic development Chief Minister
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சென்னை கிண்டியில் நடைபெற்ற சிஐஐ தென்னிந்திய மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,"தமிழ்நாட்டின் தொழில்துறை, பொருளாதாரம் உயர சிஐஐ ஆற்றும் பணியை பாராட்டுகிறேன்.

தமிழக அரசும், இந்திய தொழிற் கூட்டமைப்பும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுகிறது.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.தமிழ்நாடு.பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது.மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் தனித்துவமாக காணப்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு. தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது" எனத் தெரிவித்தார்.இது தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
tamil Nadu leading in economic development Chief Minister