"தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும்" - சீமானின் பேச்சிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேதனை! - Seithipunal
Seithipunal


திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளராக்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,  சுற்றுலாவிற்கு ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம் என்றும்,  ஆனால் தொடக்கக்கல்வி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேரை மாணவனாகிய நான் பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து சென்று கல்வி சார்ந்த, வரலாற்று சார்ந்த சுற்றுலா இடங்களை பார்க்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து சுகாதாரத் துறையுடன் இது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று சீமான் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது என்று கூறினார்.

தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது என்று கூறிய அன்பில் மகேஷ், பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil thai greeting will be removed minister anbil mahesh angrily for seeman speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->