பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும்...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Tamil Week celebrated occasion Bharathidasans birth anniversary Chief Minister MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபையில் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அப்போது அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம் பாவேந்தர் பாரதிதாசன்.

பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை.பல இளம் கவிஞர்களை உருவாக்கியவர் பாவேந்தர் பாரதிதாசன்.பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.25 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்.
தமிழர் உணர்விலும் குருதியிலும் கலந்த புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் வார விழா கொண்டாடப்படும்.கவிஞர் பாரதிதாசனை போற்றும் வகையிலான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்.
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும்.அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.தமிழ் இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Week celebrated occasion Bharathidasans birth anniversary Chief Minister MK Stalin