குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதை விட கலைஞர் பேனா முக்கியம்.! திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் பேட்டி.!
tamilachi thangapandiyan about kalaingar pena
இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கைவிடவில்லை என்று பேசியுள்ளார்.
இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், " நிதி சுமை ஏற்பட்டு இருப்பதால் தமிழக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற திட்டத்தை முதல்வர் முற்றிலுமாக கைவிடவில்லை.

நிதி பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். ஆனால் மக்கள் ஒன்றை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். அதாவது கலைஞரின் பேனா எப்படிப்பட்டது என்பதை உணர வேண்டும்.
கலைஞர் ஆட்சிக்கு வந்ததும்தான் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டம் வந்தது. பதவியேற்றவுடன் இதற்கான கையெழுத்தை போட்டது அந்த பேனா தான். கலைஞர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நேரமும் தமிழர்களின் தலை நிமிர்ந்துள்ளது.

அத்தனை கோடி கையெழுத்துக்களை இட்ட அந்த பேனாவை அவரது நினைவுச் சின்னமாக அமைப்பது மிகவும் பொருத்தமானது. திமுக அறிவித்த எந்த திட்டங்களையும் முதல்வர் கைவிடவில்லை. சூழ்நிலை அப்படி இருக்கிறது. கூடிய விரைவில் அனைத்து திட்டங்களும் நிறைவேறும்."என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tamilachi thangapandiyan about kalaingar pena