பத்தல பத்தல!!! இப்போது இருக்கும் 55 செயற்கை கோள்கள் போதுமானதாக இல்லை...! - இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
current 55 satellites not enough ISRO Chairman V Narayanan
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்,'எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, அடுத்த 3 ஆண்டுகளில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்தியா மேலும் 100-150 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும்.

இதில் தற்போது, இந்தியா சுமார் 55 செயற்கைக்கோள்களை இயக்குகிறது. பரந்த எல்லையையும் 7,500 கி.மீ கடற்கரையையும் கொண்ட ஒரு நாட்டிற்கு, இது போதுமானதாக இல்லை ' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ,விண்வெளித் துறையின் செயலாளரான நாராயணன், இந்தக் காரணங்களால்தான் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
இது ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிக்கிறது என்றும் தெரிவித்தார்.
English Summary
current 55 satellites not enough ISRO Chairman V Narayanan