தேர்தலில் போட்டியிட ஆளுநர் பதவி ராஜினாமா? - தமிழிசை சொந்தரராஜன் அதிரடி.!!
tamilisai going to resigning governor post is false news
தெலங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் "நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்பது தவறான செய்தி. மேலிட உத்தரவு என்னவோ அதனை நான் செய்து வருகிறேன். நான் எப்பொழுதும் மக்களுடன் இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீராமரின் தயவால் நான் பணியாற்றி வருகிறேன். தென் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து விட்டு வந்தேன்" என சமூகவகைத்தளங்களில் பரவி வரும் வதந்திக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
English Summary
tamilisai going to resigning governor post is false news