நான் கட்சி சார்பில் தான் இருக்கிறேன்! எந்த கட்சி தெரியுமா? - தமிழிசை சவுந்தரராஜன்!
Tamilisai said she belong to the people party
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வேலம்மாள் கல்வி குழுமம் பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான ஆறு பேர் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் "நீதிமன்றத்தின் தீர்ப்பில் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் நீட்டை எதிர்க்கின்றன. நீட் விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, 10 சதவீத இட ஒதுக்கீடும் உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது, ஆறு பேர் விடுதலையும் உச்சநீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. அதனால் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. இவை உச்சம் பெற்ற நீதிபதிகளின் தீர்ப்பு அதை நான் மதிக்கிறேன்.
ஆனால் தமிழகத்தில் என்னவென்றால் நமக்கு வேண்டிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கினால் அது சரியான தீர்ப்பு. அதே உச்ச நீதிமன்றம் தங்களுக்கு வேண்டாததை சொன்னால் உடனே விமர்சனம் செய்கிறார்கள். எனவே ஆறு பேர் விடுதலையை நீதியின் பால் கிடைத்த தீர்ப்பு என்பதால் நான் அதை விமர்சனம் செய்ய விரும்பவில்லை" என பதில் அளித்தார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் தெலுங்கானாவிலும் பாண்டிச்சேரியிலும் ஆளுநர் என்ற முறையில் செயல்படாமல் கட்சி சார்பில் செயல்படுவதாக விமர்சனம் எழுவது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் "ஆமாம்பா... கட்சி சார்பாக தான் செயல்படுகிறேன். நான் மக்கள் கட்சி, மக்களோடு இருக்கின்ற கட்சித் தலைவர்" என சிரித்தவாறு பதில் அளித்து விட்டு சென்றார்.
English Summary
Tamilisai said she belong to the people party