திமுக-பாஜக ரகசிய உறவா? - எடப்பாடி பேச்சுக்கு தமிழிசை விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக கூறிவிட்டு மீண்டும் பங்கேற்றதன் மூலம் திமுக-பாஜக-வின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:- "தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்... தமிழ்... என்று பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று முதலமைச்சர் கூறினார்.

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று தங்களது அமைச்சர்களோடு அந்த விருந்தில் பங்கேற்றுள்ளார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன் பின்னர்தான் முதலமைச்சர் அந்த விருந்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இதில் இருந்து திமுகவும், பாஜக-வும் ரகசிய உறவு வைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது.

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்தபோது எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நாணயத்தை அதிமுகவே வெளியிட்டது. நாங்கள் பாஜக-வை அழைக்கவில்லை. ஆனால் திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு, விழாவுக்கு ராகுல்காந்தியை அழைக்காமல், பாஜக-வை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறது. இதில் இருந்தே அவர்களின் ரகசிய உறவு வெட்டவெளிச்சமாகி இருக்கிறது" என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடியின் பேச்சுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:- "திமுக மற்றும் பாஜக ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிக்கிறது. இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai soundarrajan explain edappadi palanisamy speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->