தமிழக பாஜக மூத்த தலைவருக்கு ஆளுநர் பதவி.. யார் தெரியுமா.?
Tamilnadu BJP leader selected next governor
தமிழகத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் பாஜக தலைவராக இருந்தால் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும், ஆளுநர் பதவியும் வழங்கப்படுவது பாஜகவில் வழக்கமாகி வருகிறது. இதில் தேர்தலில் வெற்றி பெறாமல் நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அதேபோல், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழகத்தின் மூத்த பாஜக தலைவர்கள் ஆளுநர் பதவியும் வகித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார். தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பாஜக மூத்த தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், சி பி ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது.
English Summary
Tamilnadu BJP leader selected next governor