ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸால் மனம் கவர்ந்த ராகுல் - தமிழக வெற்றி குறித்து முலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு!! - Seithipunal
Seithipunal



கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. அதில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழக தேர்தலில் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றும் ஒன்றாக ஒரே மேடையில் நடைபெறுகின்றன. 

இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்  பி. க்கள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் அவர் பேசியதாவது, தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அவருக்கென ஒரு பிம்பம் இங்கு உருவாகி இருந்தது.

ஆனால் ராகுல் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி கொடுத்து பிரதமரின் அந்த பிம்பத்தை அடித்து நொறுக்கி விட்டார். ராகுல் அன்று இங்கு வந்த போது வழங்கிய இனிப்பு தான் தமிழகத்தில் திமுக கூட்டணியின் 40 க்கு 40 வெற்றிக்கு காரணம். 

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் நான் முன்பே 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்று மிகவும் நம்பிக்கையோடு இருந்தேன். அந்த நம்பிக்கையை உண்மையாக்கிய திமுக உடன் பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மு. க ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM M K Stalin Speaks About Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->