நாளை மறுநாள் 'தமிழ்நாடு நாள் விழா' - தமிழக அரசு தரப்பில் வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal



வரும் 18ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள 'தமிழ்நாடு நாள் விழா'-வில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

"முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நாள் விழா சூலை 18 ஆம் நாள் காலை 11.30 மணியளவில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றவுள்ளார். தமிழ்நாடு நாள் விழாவில், கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகின்றது. 

இவ்விழாவினை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இலக்கியமாமணி விருது 2021, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது-2021, கபிலர் விருது-2021, உ.வே. சா விருது- 2021, அம்மா இலக்கிய விருது - 2021, காரைக்கால் அம்மையார் விருது - 2021 ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரையும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் முன்னிலையுரையும் ஆற்றவுள்ளார்கள். 

தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு நில அளவைத் துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சியினை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் 18.07.2022 முதல் 20.07.2022 வரை மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu day 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->