தமிழ்நாடு நாள் நவம்பர் 1" - எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வென்ற, தமிழ் கூறும் நல்லுலகு என்னும் பெருமைமிகு நம் "தமிழ்நாடு" உருவான வரலாற்றையும், அதற்கு துணைநின்ற அனைத்து தியாக உள்ளங்களையும் போற்றி வணங்குகிறேன். தமிழ்நாடுநாள் நவம்பர் 1" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதேபோல், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி  தான் நமக்கு  தமிழ்நாடு நாள்.  இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும்,  தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான்  தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள்  அநீதிகளை எதிர்கொள்வதற்கும்,  தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும்  காரணமாகும்.  நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.

தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று  நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தான்  சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன்  கொண்டாட அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Day 2022 ADMK EPS Wish


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->