#BREAKING : விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க மறுப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, வருகின்ற பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி ஒரேகட்டமாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி தொடக்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியும், பிப்ரவரி 7ஆம் வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் மற்றும் தொகுதி குறித்த ஆலோசனை தற்போது சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையத்திடம் விஜய் மக்கள் இயக்கம்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், மாநில தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu state election commission reject auto for VMI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->