தமிழகத்தில் பேட்டரி வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது. 

01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tax rebate battery vehicles TNGovt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->