தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாளை மறுநாள் மாலை தேநீர் விருந்து...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

அண்மையில், இந்த வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் குறிப்பாக, அந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்கள்.

இந்த தீர்ப்பு இந்தியா முழுவதுமுள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கவர்னர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்கி, வில்சன் எம்.பி. ஆகியோருக்கு சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

மேலும், வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tea party for lawyers who argued on behalf Tamil Nadu government day after tomorrow evening CM MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->