"அதிக வேலை மூளை செயல்திறனுக்கு நல்லது"....12 மணி நேர வேலத்திட்டத்தை ஆதரித்து பேசிய ஆளுநர் தமிழிசை சொளந்தர்ராஜன்.! - Seithipunal
Seithipunal


தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி தொழிலாளர்களின் சட்ட விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசும் மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டவிதி மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது அதன்படி தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்றும்  வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனவும் மசோதாவை தாக்கல் செய்தது.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த போதும்  குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது மாநில அரசு. இது தொடர்பாக  கூட்டணி கட்சிகள் திமுக அரசின் இந்த  சட்டத்திற்கான நிலைப்பாட்டிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர். திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.  மேலும் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் செயலாளர் சீமான் இந்த சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை வீரியமுடன் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு நாளில் அதிக நேரம் வேலை செய்வது மனித மூளையின் நலத்திற்கு நல்லது என்று தெரிவித்திருக்கிறார். அதிகமாக வேலை செய்வதன் மூலம் அதிகமான ஓய்வு கிடைக்கும் என்பதால்  அந்த ஓய்வு நேரங்களை நமது பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு ஆக்கபூர்வமான திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிக நேரம் வேலை செய்துவிட்டு அதிக நேரம் ஓய்வெடுத்தால் மனித சக்தி மற்றும் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ள தமிழிசை  சௌந்தர்ராஜன். இது தொழிலாளர்கள்  தொடர்பான பிரச்சனை அதனால் இதற்கான முடிவை அவர்களிடமே விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Chief Minister Tamilisai Soundarrajan supports the change in labor laws brought by the Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->