காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி கத்தியால் குத்திக் கொலை! அதிரும் அரசியல் வட்டாரம்! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்த்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மரு கங்காரெட்டி(வயது 56) கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மரு கங்காரெட்டியை திடீரென ஒரு கார் மோதியுள்ளது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மரு கங்காரெட்டியை, காரில் வந்த நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கங்காரெட்டியின் உடலை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, இறந்தவர் எம்எல்சி ஜீவன் ரெட்டியின் நெருங்கிய கூட்டாளி என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

கங்காரெட்டிக்கும், ஜீவன் ரெட்டிக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Congress Heat Brutal Murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->