ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செல்போன் ஒட்டுக்கேட்பு?!
telangana governor tamilisai soundararajan cellphone tapped
தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தனது செல்போனை ஒட்டுக் கேட்கிறார்கள் என்று புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேர ராவ் தலைமையிலான, ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழகம், கேரளா போலவே பா.ஜ.க எதிர்க்கும் மனப்பான்மையில் உள்ள முதல்வர் சந்திரசேகர ராவ், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் தொடர்ந்து மோதல் போக்கில் இருந்து வருகிறார்.
முதல்வர் சந்திரசேர ராவுக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள இந்த கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தனது செல்போன்ஒட்டுக்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என்று, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் முன்னாள் உதவியாளர் துஷார் தீபாவளி வாழ்த்து கூறியது முதல், தன்னுடைய செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது என்று சொல்லும் ஆளுநர் தமிழிசை, தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற நிலை இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல் கட்சியினர் எந்த காரணமும் இல்லாமல் ஆளுநர் மாளிகையை குற்றம்சாட்டி பேசு வருகின்றனர் என்றும், ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
English Summary
telangana governor tamilisai soundararajan cellphone tapped