"ஆளுநர்களை, மாநில அரசுகள் நடத்தும் விதம் சரியல்ல" தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாகவே ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான விரிசல் தொடர்பு கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் ஆளுநர் மற்றும் ஆளும் அரசுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை.

இந்நிலையில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மாநில அரசுகள் ஆளுநரை குறைவாக மதிப்பிட்டு பேசுவது  சரியான நடைமுறை அல்ல என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை  முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கல்வி மற்றும் சமூகம் எப்படி இருக்க வேண்டும்? என்ற தொலைநோக்கு பார்வையை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆளுநர்களை மாநில அரசுகள் குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Governor Tamilisai Soundarrajan condemns state government treatment of governors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->