தளபதி VS தளபதி : திமுகவினரை சீண்டும் விஜய் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


2021 -ல் தளபதி ஸ்டாலின், 2026 -ல் தளபதி விஜய் என்ற அர்த்தத்தில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருப்பது, திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரை அவரின் ரசிகர்கள் தளபதி என்று அழைத்து வருகின்றனர். 

அதேசமயம் தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள, திமுக தலைவர் மு க ஸ்டாலினை, திமுக தொண்டர்கள் தளபதி என்று அழைத்து வருகின்றனர். இதன் காரணமாக தளபதி என்ற பட்டமே அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாவது உண்டு.

இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள், அவ்வப்போது போஸ்டர்களை அடித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில், மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் களம் இறங்க வேண்டும் என்றும், முடிவு எடுத்தால் முதல்வர் என்றும் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

மேலும், முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள முதல்வர் வேட்பாளர் நடிகர் விஜய்க்கு பிரபல தனியார் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தான் தேர்தல் ஆலோசகர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2021இல் தளபதி ஸ்டாலினையும், 2026 தளபதி நடிகர் விஜய்யும் என்று விஜய் ரசிகர்கள் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்த போஸ்டர் குறித்து நீங்கள் டிவிட்டரில் உங்கள் கருத்துகளை பதிவிட கீழ்காணும் டுவிட்டர் பதிவை கிளிக் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THALAPATHY VS THALAPATHY


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->