கோடிக்கணக்கில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சியில் முதலீடு.! சிக்கிய முன்னாள் அமைச்சர் தங்கமணி.!! - Seithipunal
Seithipunal


தமிழக மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும் 2016 முதல் 2020 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் உதவியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய நபர்கள் என சந்தேகப்பட்ட நபர்களின் வீடுகள் மற்றும் 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் 14 இடங்களிலும், நாமக்கல் உட்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய மொத்தம் 69 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக தங்கமணியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது மகன், மூன்றாவது குற்றவாளியாக அவரது மனைவி மூலம் 7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பெறப்பட்டுள்ளது. 

இந்த மூவரின் சேமிப்பு தொகை 2 கோடியாக மட்டுமே உள்ளது. 2016 முதல் 20 வரையிலான பணிக்காலத்தில், பொது நிதியை தவறாக பயன்படுத்தி ரூபாய் 4 கோடி வரை வருமானத்திற்கு கூடுதலான வகையில் சொத்துகள் சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangamani investment for cryptocurrency


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->