ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி வழங்க இருந்த பதவி! ரகசியத்தை போட்டுடைத்த தங்கமணி! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, "உச்ச நீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை. வழக்கு முடிந்த பிறகு நடத்துவோம் என்று தெரிவித்தோம்.

ஆனால் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதைத்து விட்டதாக இங்கு தவறான செய்தியை திமுகவின் தூண்டுதலின் பெயரில் பத்திரிகைகள் பரப்பி வருகிறார்கள்.

இதனை பார்த்துவிட்டு எனக்கு நிறைய பேர் போன் மூலம் அழைத்து விளக்கம் கேட்டு கொண்டு இருக்கின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலையை பார்த்து கட்சி இருக்குமா? இரட்டை இலை இருக்குமா? என குழப்பி கொண்டு இருக்கின்றனர்.

நான் நிச்சயமாக சொல்லிக் கொள்வது இதுதான் விரைவில் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக ஆவார்.

எடப்பாடி பழனிசாமியை வேண்டா வெறுப்பாகத்தான், ஒபிஎஸ் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். ஒற்றை தலைமைக்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்த நிலையிலும், அவருக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார்" என்று தங்கமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangamani Say About EPS OPS ADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->