தஞ்சை கிருஸ்துவ பள்ளி மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க கூடாது - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு.!
thanjai school girl suicide case issue tn govt appeal to supreme court
தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது குறித்து, தமிழக அரசு வழக்கறிஞர்கள் இன்று காலை முதல் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ரத்து செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு என்பதால், இதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை, பள்ளி மாணவி லாவண்யாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
thanjai school girl suicide case issue tn govt appeal to supreme court