கன மழையில் சுற்றிச் சுழன்று பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தில் இருந்து தலைநகரின் இலட்சணக்கணக்கான மக்களைக் காக்க, சுற்றிச் சுழன்று பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களின் அளப்பரிய சேவைக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதில், சென்னையில் சில பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனை தொடர்ந்து  நீர் தேங்கியுள்ள 542 இடங்களில் 532 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளதாகவும்,  மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை நகராட்சி இன்று அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தில் இருந்து தலைநகரின் இலட்சணக்கணக்கான மக்களைக் காக்க, சுற்றிச் சுழன்று பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களின் அளப்பரிய சேவைக்கு நமது நன்றியின் சிறிய அடையாளம் என்று புகைப்படங்களை பகிர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thank you to the sanitation workers who worked around in the heavy rain chief minister mk stalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->