வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது என, மத்திய அரசு உச்ச நீதிமன்றில் பதில் மனு தாக்கல்..!
The Central Government has filed a reply in the Supreme Court saying that the Waqf Act should not be banned
வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது, என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பி இருந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தடை விதிப்பது என்பது அதிகார சமநிலை கொள்கைக்கு எதிரானது என்றும், பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பாராளுமன்ற இரண்டு அவைகளிலும், மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டத்தின் அரசியலமைப்பு உறுதித்தன்மையை ஆராயும் அதிகாரம் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது. அதேநேரத்தில் இந்த இடைக்கால கட்டத்தில் எந்தவொரு விதியையும் செயல்படுத்துவதற்கு எதிராக ஒரு தடை உத்தரவை பிறப்பிப்பது என்பது அதிகார சமநிலையை மீறுவதாக அமைந்துவிடும் என்று மத்திய அரசின் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
English Summary
The Central Government has filed a reply in the Supreme Court saying that the Waqf Act should not be banned