முதலமைச்சருக்கு கிடைப்பது செயற்கை வரவேற்பு!...2026-ல் கூட்டணி ஆட்சி உறுதி - தமிழிசை செளந்தர்ராஜன் தாக்கு!
The chief minister gets an artificial welcome coalition government is assured in 2026 tamilisai attacks
தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் செய்தொயாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் யாரும் பிரச்சனைகளை உருவாக்கவில்லை என்றும், உங்கள் கூட்டணிக்குள் நீங்களே தான் பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.
மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு , சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நீங்கள் தான் பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள், இதன் காரணமாக 2026-தேர்தலில் கூட்டணி கட்சி தான் ஆட்சி அமையும் என்று கூறினார்.
பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியுடன் இணையும் கூட்டணி கட்சிகள் மூலம், திமுக இல்லாத கூட்டணி கட்சி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மழை நீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் முழுமையாக நிறைவு செய்யப்பட வில்லை என்று கூறிய அவர், மருத்துவம், கல்வி, பல்கலைக்கழகங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் நிரப்பப் படாமல் இருப்பது வேதனை என்று கூறினார்.
மேலும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மூலம் செயற்கையான வரவேற்பை பெற்று வருவதாவும், 2026-ல் கூட்டணி கட்சி தான் ஆட்சி அமையும் என்று கூறினார்.
English Summary
The chief minister gets an artificial welcome coalition government is assured in 2026 tamilisai attacks