போதும்!!!இந்தி திணிப்பு நாடகம் அம்பலமாகிவிட்டது!!!- அண்ணாமலை
The Hindi imposition drama has been exposed Annamalai
முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் . அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது, " மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர்க் கையெழுத்திட்டுள்ளனர். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு வரவேற்பு பெற்று வருகிறது.

கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை . பாஜக கையெழுத்து இயக்கம் வெற்றிப் பெற்றதைக் கண்டு முதலமைச்சர் அதிர்ச்சடைந்தது தற்போது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தைக் கூட தி.மு.கவால் நடத்த முடியவில்லை. இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டக்கத்தியை வீசாதீர்கள். திமுகவின் போலி இந்தி திணைப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதனை உணராதது துரதிஷ்டவசமானது " எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
The Hindi imposition drama has been exposed Annamalai