சட்டசபை தேர்தலில் டெல்லி மக்கள் பா.ஜ.கவுக்கு ஆசி வழங்க தயாராகிவிட்டனர்.. பிரதமர் மோடி பேச்சு! - Seithipunal
Seithipunal


 மக்களவை தேர்தலின்போது டெல்லியில் பா.ஜ.க.வுக்கு ஆசி வழங்கிய மக்கள், தற்போது சட்டசபை தேர்தலில் ஆசி வழங்க தயாராகி வருகின்றனர் என்றும்  டெல்லி மக்களின் இதயத்தை வெல்வதற்கும், பேரழிவிலிருந்து விடுபடுவதற்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு என பிரதமர் மோடி சூளுரைத்தார்.

பிரதமர் மோடி இன்று டெல்லியில் ரூ. 12,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே சுமார் ரூ.4,600 கோடி மதிப்பிலான டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் 13 கி.மீ. தூரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இந்தநிலையில் டெல்லி ரோகிணி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக பேரழிவு என்பதற்கு குறையாத ஆட்சி உள்ளதாகவும் இதை டெல்லி மக்கள் உணர்ந்துள்ளனர் என்றும் இந்த பேரழிவை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளதாகவும்  இந்த மாற்றத்தை பா.ஜ.க. கொண்டு வரும் என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து கூட்டத்தில் ஆவேசமாக பேசிய பிரதமர் மோடி:டெல்லியில் செயல்படுத்தி வரும் பல நலத்திட்டங்களை பா.ஜ.க. அரசு நிறுத்திவிடும் என்ற அச்சத்தை ஆம் ஆத்மி அரசு பரப்புகிறது என்றும்  ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது என்றும்  ஆம் ஆத்மி அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட மத்திய திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று உறுதியாக கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மேலும் பேசிய மோடி:தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் தேக்கம் மற்றும் மாசுபாடு என டெல்லியின் பேரழிவு அரசாங்கம் ஒவ்வொரு சீசனையும் ஒரு அவசரநிலையாக மாற்றியது என குற்றம்சாட்டிய அவர்  ஆம் ஆத்மி கட்சியை டெல்லியில் இருந்து அகற்றினால் மட்டுமே, வளர்ச்சி மற்றும் நல்லாட்சி என்ற இரட்டை இயந்திரம் வரும் என குறிப்பிட்டார்.

கடைசியாக கூட்டத்தில் பேசிய மோடி ,மக்களவை தேர்தலின்போது டெல்லியில் பா.ஜ.க.வுக்கு ஆசி வழங்கிய மக்கள், தற்போது சட்டசபை தேர்தலில் ஆசி வழங்க தயாராகி வருகின்றனர் என்றும்  டெல்லி மக்களின் இதயத்தை வெல்வதற்கும், பேரழிவிலிருந்து விடுபடுவதற்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு என சூளுரைத்தார்.இவ்வாறு பிரதமர் மோடி  பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The people of Delhi will vote for the BJP in the assembly elections They are ready to give their blessings Prime Minister Narendra Modis speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->