மூன்று பன்றிகளை திருடிய சதீஷ்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
theft bail case Chennai HC Division
₹2 லட்சம் மதிப்புள்ள மூன்று பன்றிகளை திருடி விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மீது மூன்று பன்றிகளை திருடி விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கூறி சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றத்தில், அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதையும், இதனால் முன்ஜாமின் வழங்குவதை அரசுத் தரப்பு எதிர்த்து வாதிட்டது.
ஆனால், மனுதாரரான சதீஷ்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
theft bail case Chennai HC Division