ஹரியானாவில் காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் - பிரதமர் மோடியை சந்தித்த பின் ஹரியானா முதலமைச்சர் பேட்டி! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும்  கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், இதில் பாஜக 48 தொகுதிகளையும், காங்கிரஸ் 37 தொகுதிகளையும் கைப்பற்றியது.


இதன் மூலம் ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில்,  தற்போதைய முதலமைச்சராக உள்ள நயாப் சிங் சைனியே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நயாப் சிங் சைனி சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மகத்தான வெற்றியின் பெருமை, பிரதமரின் கொள்கைகள் மற்றும் அவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடே இந்த வெற்றி என்று குறிப்பிட்டார்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து காங்கிரஸ் கட்சி தற்போது கேள்வி எழுப்புகிறார்கள் என்றும், தேர்தல் தொடர்பான அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரசுக்கு சாதகமாகவே இருந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற சூழலை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்று  கூறினார்.

இதற்கிடையே, ஹரியானாவின் எதிர்பாராத முடிவை நாங்கள் பகுப்பாய்வு செய்வதாகவும், பல சட்டசபை தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளதாக ராகுல் காந்தி
தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

They are trying to bring congress to power in haryana chief minister interview after meeting pm modi


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->